Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமிதாப் பச்சனின் புதிய படத்தைக் கண்ணீர் விட்ட அமீர்கான்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (17:04 IST)
நடிகர் அமீர்கான் அமிதாப் பச்சன் நடிப்பில் நாகராஜ் மஞ்சுளே இயக்கியுள்ள ஜூண்ட் புதிய படத்தை பார்த்து பாராட்டியுள்ளார்.

பன்றி மற்றும் சாய்ராட் ஆகிய படங்களின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நாகராஜ் மஞ்சுளே. இந்திய சினிமா உருவாக்கிய தலித் இயக்குனர்களில் முக்கியமானவராக பேசப்படும் நாகராஜ் மஞ்சுளே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பில் ஜூண்ட் என்ற படத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினார்.

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பட ரிலிஸ் தாமதமான நிலையில் இப்போது மார்ச் 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் சிறப்புக் காட்சி நடிகர் அமீர்கானுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த பின்னர் வெகுவாக நடிகர்கள் மற்றும் இயக்குனரைப் பாரட்டிய அமீர்கான் ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments