Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அமிதாப்… ரசிகர்களின் சந்தேகங்களுக்கு பதில்!

Advertiesment
கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அமிதாப்… ரசிகர்களின் சந்தேகங்களுக்கு பதில்!
, திங்கள், 1 மார்ச் 2021 (15:43 IST)
நடிகர் அமிதாப் பச்சன் தான் கண்ணில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் 80 வயதிலும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தனது அன்றாட நிகழ்வுகளை வெளியிட்டு எழுதி வருகிறார். இந்நிலையில் சில நாட்களாக அவர் எந்த பதிவையும் எழுதாத நிலையில் திடீரென நேற்று ‘மருத்துவப் பிரச்சனை… அறுவை சிகிச்சை… அதனால் எதுவும் எழுத முடியவில்லை ‘ என ஒரு டிவீட்டைப் பகிர்ந்திருந்தார். ஆனால் என்ன அறுவை சிகிச்சை, உடல் நிலை எப்படி இருக்கிறது என்று அறிவிக்காததால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

இந்நிலையில் இப்போது அதுகுறித்து விளக்கமாக அறிவித்துள்ள அமிதாப் ‘இந்த வயதில் கண்ணில் அறுவை சிகிச்சை என்பது சிக்கலானது. நடந்ததும், நடப்பவையும் நன்மைக்கே என நம்புவோம். எழுதவோ, படிக்கவோ முடியவில்லை. மறதியான ஒரு நிலையில் அமர்ந்திருக்கிறேன். கண்கள் மூடி இருப்பதால் இசைக் கேட்க முயல்கிறேன். ஆனாலும் திருப்திகரமாக இல்லை’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கும் ஆலியா பட்!