Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஸ்ட் படத்தின் கதை சுருக்கம் இதுதானா…. வெளியிட்ட திரையரங்கம்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (10:07 IST)
பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தைப் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் இந்த படம் ரிலீஸாகும் ஒரு திரையரங்கில் பீஸ்ட் படத்தின் கதை சுருக்கத்தை தங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் ‘நகரின் பரபரப்பான பகுதி (ஷாப்பிங் மால்) சர்வதேச தீவிரவாதிகளால் கைப்பற்றப்படுகிறது. அவர்களோடு இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அப்போது கைப்பற்றப்பட்ட மாலில் இந்திய ரா ஏஜெண்ட் ஒருவர் இருப்பது தெரியவர அவர் மூலமாக மக்களைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறது. அதற்குள் தீவிரவாதிகளின் தலைவன் அரசாங்கத்தால் விடுவிக்கப்படுகிறான். புத்திசாலித்தனமாக செயல் பட்டு கதாநாயகன் எப்படி தீவிரவாதிகளை வெல்கிறான் என்பதே கதை’ என அறிவித்துள்ளது. படத்தின் டிரைலரும் கிட்டத்தட்ட இதை உறுதி செய்வது போலவே உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

கிளாமர் உடையில் போட்டோஷூட் நடத்திய கியாரா அத்வானி!

சூர்யா கார்த்திக் சுப்பராஜ் படத்தின் கதாநாயகி இவர்தான்…!

தக் லைஃப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments