Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊ சொல்றியா மாமா பாட்டு எனக்கு சுத்தமா பிடிக்கல.. ஓப்பனாக சொன்ன மூத்த பாடகி!

Advertiesment
ஊ சொல்றியா மாமா பாட்டு எனக்கு சுத்தமா பிடிக்கல.. ஓப்பனாக சொன்ன மூத்த பாடகி!
, புதன், 8 மார்ச் 2023 (15:19 IST)
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் சமந்தா நடனத்தில் இடம்பெற்றிருந்த ஊ சொல்றியா மாமா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. ஐந்து மொழிகளிலும் அந்த பாடல் வெவ்வேறு பாடகிகளால் பாடப்பட்ட நிலையில் தமிழில் ஆண்ட்ரியா அந்த பாடலைப் பாடினார்.

இந்நிலையில் பாடலைப் பற்றி பேசியுள்ள பழம்பெரும் பாடகி எல் ஆர் ஈஸ்வரி “அந்த பாடல் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரேமாதிரியாக இருந்தது. இப்போது வரும் பாடல்கள் எனக்குப் பிடிப்பதில்லை” என ஓபனாக பேசியுள்ளார். இது திரை ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் சினிமா ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷ் சம்யுக்தாவின் போட்டோஷூட் புகைப்படங்கள்!