Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த பொண்ணு அவனுக்கு ஒத்துவரல...கடவுளே பார்த்து நல்ல பொண்ண கொடுத்துட்டாரு...!

Advertiesment
அந்த பொண்ணு அவனுக்கு ஒத்துவரல...கடவுளே பார்த்து நல்ல பொண்ண கொடுத்துட்டாரு...!
, வெள்ளி, 31 ஜனவரி 2020 (15:21 IST)
பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் ஏ.எல்.விஜய், கீரிடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ’பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’ ஆகிய படங்களை இயக்கினார். 
 
தெய்வ திருமகள் படத்தின் போது அந்த படத்தில் நடித்த அமலா பாலுடன் காதல் வயப்பட்டு 2014 ஆம் திருமணம் செய்துக்கொண்டு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரஸ்பர மனதுடன் விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் ஏ. எல் விஜய்  ஐஸ்வர்யா (MBBS) என்ற பெண்ணை 2வதுதிருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தற்போது தனது மகனின் வாழ்க்கை குறித்து பேசியுள்ள ஏ. எல் அழகப்பனிடம், உங்கள் பிள்ளைகள் கூட சினிமாவில் வரக்கூடாது என்று நீங்கள் நினைத்ததால் தான் ஒரு நடிகையை தன் மகன் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கவில்லையா? என கேட்டதற்கு அவர் கூறியதாவது..... 
 
"என் மகன் ஆரம்பத்தில் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று சொன்ன போதே நான் மறுத்தேன். காரணம் அந்த பெண் எங்கள் குடும்பத்திற்கும்,  மகனுக்கும் ஒத்துவராது என தோன்றியது. ஆனால், என் மகன் விரும்பினான் என்ற ஒரே காரணத்திற்காக ஓகே சொன்னேன். சொல்வதற்கு முன்னாள் அந்த பெண்ணிடம், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது ,இந்து முறைபடி தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறினோம். அதெற்கெல்லாம் சம்மதித்த அவர் பின்னர் முரண்பாடாக நடந்துகொண்டார். 
 
அதுமட்டுமின்றி அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டேன். அதன் பின்னர் அந்த பெண்ணும் வேண்டாம் என்று கூறி விட்டது என் மகனும் வேண்டாம் என்று கூறிவிட்டான். அதையடுத்து ஒரு வருடங்களுக்கு மேல் இவனுக்கு பெண் பார்த்தோம் ஆண்டவன் புண்ணியத்தில் தற்போது எங்கள் குடும்பத்திற்கு ஏற்றவாறு ஒரு நல்ல பெண் கிடைத்துவிட்டது . நல்ல குடும்பம் அமைந்து சந்தோஷமாக இருக்கிறது என்று அழகப்பன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டகால்டி: சினிமா விமர்சனம்!