Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அக்கா குருவி”… இளையராஜா இசையில் நெகிழ்ச்சியான டிரைலர்!

Webdunia
திங்கள், 2 மே 2022 (09:42 IST)
சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் தமிழ் ரீமேக்கான அக்கா குருவி திரைப்படம் இன்று மாலை சென்னையில் திரையிடப்பட உள்ளது.

உலக சினிமா ரசிகர்கள் யாரிடம் கேட்டாலும் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்றாக சில்ரன் ஆஃப் ஹெவன் படத்தை சொல்லுவார்கள். அந்த அளவுக்கு உலக அளவில் ரசிகர்களைப் பெற்ற இந்த படத்தை இயக்குனர் மஜித் மஜீது இயக்கியிருந்தார். ஒரே பள்ளியில் படிக்கும் அண்ணன் தங்கை இருவர். தங்கையின் ஷூவை அண்ணன் தொலைத்து விடுகிறான். அப்பாவுக்கோ புது ஷூ வாங்கும் அளவுக்கு வசதியில்லை. அதனால் அண்ணன் காலையிலும் தங்கை மதியமும் மாற்றி மாற்றி அண்ணனின் ஷூவைப் போட்டு செல்கின்றனர். அதனால் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இந்நிலையில் பள்ளியில் நடக்க இருக்கும் ஒரு போட்டியில் வெல்வோருக்கு ஷூ பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்கிறான் அண்ணன்.. வென்றானா? ஷூ கிடைத்ததா ?” என்பதே கதை.

இந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்தபடத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கின்றனர். உயிர், மிருகம் மற்றும் சிந்து சமவெளி ஆகியப்படங்களை இயக்கிய சாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். கொடைக்கானல் பகுதியில் இதன் படப்பிடிப்பு நடந்தது, சமீபத்தில் நடந்த சென்னை திரைப்பட சர்வதேச விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது.

இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதையடுத்து இப்போது அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரைலரில் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்த கதிர் கௌரவத் தோற்றத்தில் தோன்றியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முக்கிய நபர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி தகவல்..!

முதல் நாள் திரைப்பட விமர்சனங்களுக்கு தடை விதிக்க முடியாது! - நீதிமன்ற உத்தரவால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!

ஜேசன் சஞ்சய் படத்தில் இருந்து விஜய் விலகி இருக்கக் காரணம் என்ன?

சென்னையில் இன்று தொடங்கியது ஜெயிலர் 2 ப்ரமோஷன் ஷூட்!

லேடி சூப்பர் ஸ்டாரை இயக்கும் அண்ணாச்சி பட இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments