Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு…. லைகாவுக்கு வைத்திருக்கும் கெடு!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (07:14 IST)
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. மே 1 ஆம் தேதி விடா முயற்சி என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த டைட்டில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருசேர எதிர்கொண்டது.

இந்நிலையில் திரைக்கதை வேலைகள் முடிந்த நிலையில் இப்போது படத்துக்கான லொக்கேஷன் தேடுதல் மற்றும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு உள்ளிட்ட்ட பணிகளில் இயக்குனர் மகிழ் திருமேனி இறங்கியுள்ளாராம். 

இதற்கிடையில் லைகா நிறுவனத்தின் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகள் நடந்ததால் உடனடியாக ஷூட்டிங்கை தொடங்கி நடத்துவதில் லைகா நிறுவனத்துக்கு சிக்கல் எழுந்துள்ளதாகவும், அதனால் ஷூட்டிங் தாமதமாவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜுன் இறுதிவரை லைகா நிறுவனத்துக்காக காத்திருப்பது எனவும் அதற்குள் விடாமுயற்சி படத்தை தொடங்கவில்லை என்றால், படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கைமாற்றி விடலாமா என்ற யோசனையில் அஜித் உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்த கட்டுரையில்
Show comments