Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகள்… யார் யார் தெரியுமா?

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (07:06 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

ஷூட்டிங் தொடங்கும் நாளுக்காக காத்திருந்து காத்திருந்து அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகி வலிமை அப்டேட் போல விடாமுயற்சி அப்டேட்டை செல்லும் இடமெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த படம் கைவிடப்பட உள்ளதாக தகவல்கள் தீப்போல பரவின. ஆனால் அது உண்மையில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தமன்னா கதாநாயகியாகவும், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இருவரிடமும் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments