நடிகர் அஜித் ஒரு மிகச் சிறந்த கார் ரேஸ் வீரராக இருக்கும் நிலையில், அவர் தனது மகனுக்கும் கார் ரேஸ் பயிற்சி அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், அஜித் தனது மகனுக்கு கார் ரேஸ் பயிற்சி அளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தனியார் கார் ரேஸ் மைதானத்தில் இந்த பயிற்சி நடைபெற்றது. அஜித் காரை ஓட்ட, அவர் பின்னாலேயே அவரது மகன் ஆத்விக் காரை ஓட்டுகிறார்.
ஏற்கனவே ஆத்விக் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் பள்ளி அளவிலான கால்பந்து போட்டியிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில், தற்போது அப்பாவைப் போலவே கார் ரேஸ் வீரராக வேண்டும் என்ற ஆசையில், அவர் கார் ரேஸ் பயிற்சி பெற்றுவருகிறார்.
சிறுவயதிலேயே தனது விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் ஆத்விக்கிற்கு, அவரது பெற்றோர் அஜித் மற்றும் ஷாலினி ஊக்கமளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.