Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்லிம் லுக்கில் அஜித்… பிறந்தநாளில் இணையத்தில் வைரலான புகைப்படம்!

ஸ்லிம் லுக்கில் அஜித்… பிறந்தநாளில் இணையத்தில் வைரலான புகைப்படம்!
, திங்கள், 2 மே 2022 (09:49 IST)
நடிகர் அஜித் தனது 61 ஆவது படத்துக்காக உடல் எடையைக் குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்நிலையில் நேற்று அவரின் 51 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் அஜித் தன்னுடைய ஜிம் டிரைனருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தில் அஜித் வழக்கமான தோற்றத்தை விட ஒல்லியாக இருப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“அக்கா குருவி”… இளையராஜா இசையில் நெகிழ்ச்சியான டிரைலர்!