Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சுல்தான்’ பட டிரைலருக்கு இசையமைத்த அஜித் பட இசையமைப்பாளர் !

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (16:34 IST)
சுல்தன் பட டிரைலர் நேற்று மாலை யூடியூப்  தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் டிரைலருக்கு முன்னணி இசையமைப்பாளர் ஒரு இசையமைத்திருக்கிறார்.

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்.

முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளத நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை தமிழகம் முழுவதும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு.சொந்தமாக ரிலீஸ் செய்ய உள்ளார்.

இந்நிலையில் சுல்தான் படத்தின் டிரைலரை நேற்று மாலை படக்குழு வெளியிட்டது.

அதன்படி, கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் பட டிரைலர் மார்ச் 24 ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவித்த இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களுக்கு விவேக், மெர்வின் இசையமைத்திருக்கும் நிலையில் இப்படத்தின் பின்னணி இசை மற்றும் டிரெயிலருக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதுகுறித்துப் படக்குழு கூறும்போது, படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகம் உள்ளதால் அனுபவம் பெற்ற இசையமைப்பாளர் இருப்பது கூடுதல் பலமாக இருக்கும் என்பதால் யுவன் பணியாற்றியுள்ளார் எனக் கூறியுள்ளனர்.

பையா படத்தின் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் எவர்கிரீன் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் வைரல் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டன்னிங் லுக்கில் கலக்கலான ஃபோட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நயன்தாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments