Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையத்தில் கசிந்த ‘அஜித் 61’ பட வங்கி செட் புகைப்படங்கள்!

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (15:13 IST)
அஜித் தற்போது இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தின் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதுவரை நடந்த 50 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பில்  H வினோத் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அஜித் ஐரோப்பாவில் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார் வினோத்.

இந்நிலையில் படத்துக்காக பிரம்மாண்டமாக ஐதராபாத்தில் போடப்பட்ட வங்கி செட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதில் “Yours Bank” என்ற செயற்கையான வங்கி ஒன்றை உருவாக்கி முக்கியக் காட்சிகளைப் படமாக்கியுள்ளார் ஹெச் வினோத்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி பட டைட்டில் இல்லை. ‘சூர்யா 44’ டைட்டில் டீசர் வெளியீடு..!

ஷாருக் கானின் ‘கிங்’ படத்தின் இயக்குனர் திடீர் மாற்றம்!

ராமாயணம் படத்தில் வில்லனாக நடிக்க இவ்வளவு சம்பளமா?... ஆச்சர்யப்படுத்தும் யாஷ்!

அமெரிக்காவில் கமல்ஹாசனோடு திரைக்கதை எழுதும் ‘அன்பறிவ்’ மாஸ்டர்ஸ்!

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments