Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் பிரபு ஜோடியாக நடிக்கின்றாரா ஐஸ்வர்யாராய்? ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (12:04 IST)
நடிகர் பிரபு ஜோடியாக நடிக்கின்றாரா ஐஸ்வர்யாராய்?
நடிகர் பிரபுவுக்கு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் தான் பிரபு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இதே படத்தில் அமிதாப்பச்சன் ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிப்பதாக ஒரு வதந்தி கிளம்பியது என்பதும் அது வதந்தி என்பது படக்குழுவினர்களால் உறுதி செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பிரபுவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் என்ற கேரக்டரில் பிரபு நடித்து வருகிறார். கதைப்படி இந்த கேரக்டருக்கு ஜோடியாக நந்தினி என்ற கேரக்டர் இருக்கும் என்பதும், நடிகை ஐஸ்வர்யா ராய் தான் நந்தினி கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே பொன்னியின் செல்வன் படத்தில் பிரபுவின் மனைவியாக ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
அதேபோல் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் என்பதும், அவர் நடிக்கும் இன்னொரு கேரக்டர் மந்தாகினி என்பதும், கதைப்படி மந்தாகினி சுந்தரசோழரின் காதலி என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தர சுந்தர சோழன் வேடத்தில் தான் அமிதாப் பச்சன் நடிப்பதாக வதந்தி கிளம்பியது என்பதும் ஆனால் சுந்தரசோழர் வேடத்தில் நடிப்பது யார் என்பது குறித்த தகவலை என்னும் படக்குழுவினர் வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments