Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுமுக நடிகருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (12:12 IST)
மருத்துவ துறையில் நடைபெறும் ஊழல்களை சித்தரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதுமுக நடிகருக்கு ஜோடியாக  நடிக்கயுள்ளார்.
டைரக்டர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், ‘மெய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். சுந்தரம்  புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.
‘மெய்’ படத்தில், நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். சார்லி, கிஷோர் ஆகிய  இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
 
இப்படத்தின் கதாநாயகன் நிக்கி சுந்தரம், அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர். படத்துக்கு ஏற்ப தன் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு திறமை ஆகியவற்றின் மூலம் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் இப்படத்தில் மருத்துவ துறையில் மலிந்து  போய் கிடக்கும் ஊழல்களை வெளிக்கொண்டு வந்து மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும், டைரக்டர் எஸ்.ஏ.பாஸ்கரன்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments