Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ஃபர்ஹானா திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்… இஸ்லாமிய அமைப்பு கண்டனம்!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:13 IST)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே டிரைவர் ஜமுனா உள்பட ஒருசில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.  இந்த நிலையில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் ஒன்றின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’ஃபர்ஹானா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸானது.

இந்நிலையில் இது சம்மந்தமாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் “அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் மத ரீதியான பிரச்சினைகளை உருவாக்கத் திரைப்படங்களை எடுத்து அவற்றை திரையிட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதைத் தமிழகக் காவல்துறை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியிடப்பட்ட 'புர்கா' என்ற திரைப்படம் இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடுமையாகத் தாக்கி எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரிதும் மதிக்கக்கூடிய திருக்குர்ஆன் வசனங்களைத் திரையிட்டு, உண்மைக்கு மாறான கருத்துகளை இஸ்லாம் சொல்வதுபோல் புர்கா படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

புர்கா திரைப்படத்தை தொடர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அடுத்து 'ஃபர்ஹானா' என்ற படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதில் இஸ்லாமியப் பெண்களை அவமதிக்கும் விதமாக இதில் வசனங்கள் வருகின்றன. மேலும் இந்த இரண்டு படங்களிலும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் என்ற ஆடையும் கொச்சைப்படுத்தப்படுகிறது.

புர்கா திரைப்படத்தின் இயக்குநர் சர்ஜுன், நடிகர் கலையரசன், நடிகை மிர்னா, பர்ஹானா பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், நடிகர் செல்வராகவன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மீது தமிழக காவல் துறை சட்ட நடவடிக்கை மேற்கொள்வதுடன், 'ஃபர்ஹானா படத்தைத் திரையிடாமல் தடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

நிதி அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சம்யுக்தா மேனனின் ஸ்டன்னிங் புகைப்பட தொகுப்பு!

2024 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கு 1000 கோடி ரூபாய் இழப்பு…!

அடுத்த கட்டுரையில்
Show comments