Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நந்தினி அக்கா சோழர்கள் சோலிய முடிச்சு விடுங்க! – மதுரை ரசிகர்கள் ஒட்டிய வைரல் போஸ்டர்!

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (13:17 IST)
பொன்னியின் செல்வன் 2ம் பாகம் இன்று வெளியாகியுள்ள நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமா இயக்குனர் மணிரத்னம் இயக்கி வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன் 2. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் பாகம் 1 வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்த படத்தில் சோழர்கள் நாயகர்களாக காட்டப்பட்டுள்ள நிலையில் பாண்டிய ஆபத்துதவிகள் வில்லன்களாக காட்டப்பட்டுள்ளனர். முதலாம் வீரபாண்டியனின் தலையை வெட்டிய ஆதித்த கரிகாலனை கொள்வதே அவர்கள் நோக்கம். அதற்கு நந்தினியும் உதவியாக இருக்கிறாள். பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியானபோதே மதுரையில் உள்ள ரசிகர்கள் பலர் ‘பகை மறவா பாண்டியர்களின் வாரிசுகள்” என்ற பெயரில் பாண்டிய ஆபத்துதவிகளுக்கு ஆதரவாக ஒட்டிய போஸ்டர் வைரலானது.

இந்நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் போஸ்டர் ஒட்டியுள்ளனர் பகை மறவா பாண்டிய ஆபத்துதவிகள். அதில் “ஐஸ்வர்யா (நந்தினி) அக்கா.. நம்மை சீண்டி பார்த்த சோழர்கள் இனிமேல் நம்ம பக்கம் தலை வெச்சு படுக்க முடியாத அளவுக்கு அவிங்கள முடிச்சிறு” என்று வாசகங்கள் உள்ளன. இந்த போஸ்டர் நகைச்சுவையாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments