Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியத்தை விமர்சித்த அனிதா ரத்னம்!

Advertiesment
ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டியத்தை விமர்சித்த அனிதா ரத்னம்!
, சனி, 11 மார்ச் 2017 (15:48 IST)
அனிதா ரத்னம் தமிழகத்தை சேர்ந்த பாரம்பரிய நடனக் கலைஞர், நடன ஆசிரியர். பரத நாட்டியத்தில் முதன்மை பயிற்சி பெற்ற  இவர், கதகளி, மோகினியாட்டம், களரிப்பயிற்று எனும் நடன மற்றும் போர்க் கலைகளிலும் முறையான பயிற்சி பெற்றுள்ளார்.

 
ஐ.நா சபையின் தலைமையகத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டியம் ஆடியிருந்தார். அவர் ஆடிய பரத நாட்டியம் பலத்த கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.
 
ஐஸ்வர்யா தனுஷின் நடந்த்தை பாராட்டி மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பாராட்டுத் தெரிவித்திருந்தார். ஆனால் இணைய வெளியில் அந்த நடனத்தை ஏகத்துக்கும் கிண்டலடித்துள்ளனர். காமெடி நடிகர்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு  வருகின்றனர். 
 
இந்நிலையில் பிரபல பரத நாட்டியக் கலைஞர் அனிதா ரத்னமும், ஐஸ்வர்யா நடனத்தை குறை சொல்லியுள்ளார். ஐஸ்வர்யா  ஆடியது பரத நாட்டியமல்ல என்றும், பரத நாட்டியம் இன்று எந்த அளவுக்கு பரிதாப நாட்டியமாகிவிட்டது என்பதை அந்த  நடனம் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் யாருடைய பிள்ளை? சான்றிதழ்களில் குழப்பம்; கவலையில் கஸ்தூரிராஜா