Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ருதிஹாசனை ’கூலி’ படத்தில் இணைந்த ‘பிகில்’ நடிகை.. ரஜினிக்கு இருவரும் மகள்களா?

ஸ்ருதிஹாசனை ’கூலி’ படத்தில் இணைந்த ‘பிகில்’ நடிகை.. ரஜினிக்கு இருவரும் மகள்களா?

Siva

, வெள்ளி, 5 ஜூலை 2024 (22:17 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கிய நிலையில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான ‘பிகில்’ படத்தில் நடித்த நடிகையும் இணைந்துள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய படப்பிடிப்பில் ரஜினியுடன் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்ட நிலையில் ‘பிகில்’ படத்தில் நடித்த ரெபா மோனிகா என்பவரும் கலந்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது..

‘பிகில்’ படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்த இவர் ’எஃப்ஐஆர்’ உள்பட சில படங்களில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வந்துள்ளார். ரஜினி மகள்களாக ஸ்ருதிஹாசன் மற்றும் ரெபா மோனிகா ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் வேறு சில முக்கிய நட்சத்திரங்களும் இந்த படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் கூலி படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இருந்த வந்த தகவல்களே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும்.. மருத்துவரின் பதிவுக்கு விளக்கம் அளித்த சமந்தா..!