Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'கில்லி’யை அடுத்து சொல்லி அடிக்கும் இன்னொரு படத்தின் ரீரிலீஸ் .. விஜய் ரசிகர்கள் குஷி..!

Siva
வியாழன், 6 ஜூன் 2024 (11:42 IST)
விஜய் நடித்த கில்லி திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் ரீரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் புதிய திரைப்படங்களை விட அதிக வசூல் செய்து சாதனை செய்தது என்பது நான்கு வாரத்தில் இந்த படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் கில்லி திரைப்படத்தை அடுத்து தற்போது விஜய்யின் இன்னொரு சூப்பர் ஹிட் திரைப்படமான துப்பாக்கி படத்தின் ரீரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 
விஜய் , காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் ஜூன் 21ஆம் தேதி திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கில்லி போலவே இந்த படமும் வெற்றியை சொல்லி அடிக்கும் என்று விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments