Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஏலே… ரசிகர்கள் உற்சாகம்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (09:30 IST)
சில தினங்களுக்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் வெளியான ஏலே திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அப்படத்தின் இயக்குனர் ஹலிதா ஷமீம் அறிவித்துள்ளார்.

இயக்குனர் ஹலிதா ஷமீம் பூவரசம் பீப்பி மற்றும் சில்லுக் கருப்பட்டி ஆகிய  படங்களுக்கு பிறகு இப்போது சமுத்திரக்கனி மற்றும் நடிகர் மணிகண்டன் ஆகியோர் இயக்கத்தில் ஏலே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தந்தை மகன் பிணைப்பைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸாகி கவனம் பெற்றது.

இந்த திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. 17 நாட்கள் இடைவெளியில் ஓடிடி தளத்திலும் வெளியாக இருந்தது. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் விதித்துள்ள புதிய விதியின் திரையரங்கில் வெளியாகி 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகவேண்டும். அதனால் பிப்ரவரி 28 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது.

இதையடுத்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவிலேயே வெளியாகும் என படத்தின் இயக்குனர் ஹலிதா ஷமீம் அறிவித்துள்ளார். தொலைக்காட்சியில் விளம்பர இடைவேளைகளின் குறுக்கே துண்டு துண்டாக படம் பார்க்க பிடிக்காமல் படத்தை பார்க்காதவர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்த கட்டுரையில்