Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மொழிகளில் ஆதிபுருஷ் படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2023 (14:30 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ். இதில் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார். இந்தி நடிகர் சயிப் அலிகான் ராவணனாக நடித்துள்ளார். இந்த படத்தை தன்ஹாஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படம் பேன் இந்தியா படமாக இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. படம் முழுவதும் மோஷன் கேப்சரிங் முறையை பயன்படுத்தி அனிமேசன் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த படத்தின் டீசர் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அனிமேஷன் படமாக எடுக்காமல் லைவ் ஆக்‌ஷனாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தை பலர் பதிவு செய்துள்ளனர். இந்த படத்தின் அனிமேஷன் தரம் ஈர்க்கும் வகையில் இல்லை என கூறியுள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #DisappointingAdipurish என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு, இப்போது மீண்டும் அனிமேஷன் பணிகள் நடந்துவருகின்றன.

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் நடக்கும் 22வது டிரிபெகா சர்வதேச பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்படுகிறது. ஜூன் 7 ஆம் தேதி முதல் ஜூன் 18 ஆம் தேதி முதல் நடக்கிறது. இந்நிலையில் இந்த படம் ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் புதிய போஸ்டரை பிரபாஸ் 5 மொழிகளில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prabhas (@actorprabhas)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments