Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகைகளின் சம்பளப் பட்டியல் வெளியீடு.... நயன்தாரா முதலிடம்!

Advertiesment
நடிகைகளின் சம்பளப் பட்டியல் வெளியீடு.... நயன்தாரா முதலிடம்!
, புதன், 11 நவம்பர் 2020 (18:02 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர்தான் நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்குபவராக உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

கொரோனா காலத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் தயாரிப்பாளர்கள் படங்களின் ஷூட்டிங் முடிக்க முடியாமல் பெரும்  பாதிக்கப்பட்டனர்.

எனவே சமீபத்தில் நடிகர், நடிகைகள் தங்களின் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென தயாரிப்பாளர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில்  தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பில் புதிய சம்பளப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதில்நயன் தரா ரூ. 4 கோடி சம்பளம் பெறுவதாகவும், காஜல் அகர்வால் ரூ. 2 கோடி சம்பளம் பெறுவதாகவும்,
webdunia

த்ரிஷா , தமன்னா, எமி ஜான்சன் ஆகியோர் ரூ.1.50 கோடி சம்பளம் பெறுவதாகவும், ஸ்ருதிஹாசன் ரூ. 1கோடியும், கீர்த்தி சுரேஷ் ரூ. 80 லட்சம் சம்பள பெறுவதாகத் தகவல்கள் வெளியாகிறது.

மேலும் ப்ரியா ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ்,  ஸ்ரீதிவ்யா. நிவேதிதா பெத்துராஜ், உள்ளிட்ட நடிகைகள் தலா ரூ. 40 லட்சம் சம்பளம் பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

இப்புதிய பட்டியல் வெளியாகும் முன் நயன்தாரா ரு. 5 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் நடிகர்களிடமும் 30% சம்பளத்தைக் குறைக்கும் படி தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியில் ஷகிலா… எந்த நிகழ்ச்சி தெரியுமா?