நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் மற்றும் நயன்தாரா ஆகியோர் ஹைதராபாத்தில் ஏரி நிலம் ஒன்றை வாங்கி ஏமாந்துள்ளனர்.
நடிகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிடம் இருந்து நடிகை நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் தலா ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு கோடி கொடுத்து வாங்கியுள்ளனர். இவர்கள் தவிர கிரிக்கெட் வீரர் சச்சினின் மனைவி அஞ்சலியும் 6 ஏக்கர் நிலத்தை 6 கோடி கொடுத்து வாங்கியுள்ளார். ஆனால் அந்த நிலம் ஏரி ஒன்றின் நிலம் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
அதைமறைத்து அந்த நிறுவனம் அவர்களிடம் இடத்தை விற்றுள்ளது. நிலத்தை விற்ற தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்களிடையே எழுந்த மோதலால் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது. அதையடுத்து இப்போது காவல்துறை அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.