Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தெல்லாம் ஒன்றும் உதவி செய்யவில்லை… புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை பேச்சால் சர்ச்சை!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (10:58 IST)
நடிகை சிந்து சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நடிகை சிந்து அங்காடி தெரு படத்தில் நடித்ததன் மூலம் புகழ்வெளிச்சத்துக்கு வந்தார். அதன் பின்னர் சினிமாக்களில் நடித்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் வரவில்லை. அதனால் இப்போது அவர் சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தற்போது புற்றுநோய் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை செய்துகொள்ள பொருளாதார வசதி இல்லை என்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சக நடிகை பிளாக் பாண்டியோடு அந்த வீடியோவில் தோன்றியுள்ள சிந்து தனக்கு சிகிச்சைக்காக உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் கொடுத்த நேர்காணல் ஒன்றில் அஜித்தைப் பற்றி பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அதில் ’நான் ரேணிகுண்டா படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசனுக்கு முதலில் உதவி செய்தேன். அஜித் செய்தார் என்று சொல்வதெல்லாம் பொய். இது போல அஜித் நிறைய உதவிகள் செய்தார் என இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.’ எனக் கூறியுள்ளார்.

அஜித் வெளியே யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்து வருவதாக திரையுலகைச் சேர்ந்தவர்களே கூறியிருக்கும் நிலையில் சிந்துவின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ‘விடாமுயற்சி’ என்ன ஆச்சு?

விஷாலுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

முட்டுக்கட்டை போட்ட லைகா.. அதிர்ச்சியில் ஷங்கர்! கேம் சேஞ்சர் வெளியாவதில் புதிய சிக்கல்!

கமெண்டில் வந்து கண்டமேனிக்கு பேசிய நபர்கள்! புயலாய் மாறிய நடிகை ஹனிரோஸ்! - 27 பேர் மீது வழக்கு!

இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments