Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூத்த நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட காமெடி நடிகர்! பல வருடங்களுக்குப் பின் வெளியான தகவல்!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (10:59 IST)
தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரகதி தனக்கு பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த பாலியல் தொல்லைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

கே.பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க படம் உள்ளிட்ட 90 களில் வெளியான பல படங்களில் நடித்தவர் பிரகதி. இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுக்கு அம்மா, அக்கா வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, பல ஆண்டுகளுக்கு முன்னால் நகைச்சுவை நடிகர் ஒருவர் அளித்த பாலியல் தொல்லைப் பற்றி பேசியுள்ளார்.

இதுகுறித்து ‘மூத்த காமெடி நடிகர் என்கிற முறையில் அவரிடம் நன்றாகத்தான் பழகினேன். ஆனால் திடீரென்று ஒரு நாள் அவரின் செயல்களில் மாற்றம் தெரிந்தது. அவரது செயல்களைப் பாலியல் ரீதியாக அநாகரிகமாக இருந்ததை உணர்ந்தேன். பிறகு எனது கேரவேனுக்கு அவரை அழைத்து, நான் உங்களுக்கு ஏதாவது சிக்னல் கொடுத்தேனா?.. அல்லது எனது, பாடிலேங்குவேஜ் உங்களை அழைக்கிற மாதிரி இருந்ததா?.

இதை எதிர்பார்க்காத அவர் அமைதியாக இருந்தார்.  நீங்கள் நடந்துகொண்ட விதம் கேவலமானது. அங்கேயே உங்களை நான் அவமானப்படுத்தி இருப்பேன். ஆனால் அது உங்களுக்கு அசிங்கமாக இருக்கும் என்பதால்தான் பொறுத்துக் கொண்டேன். அதன் பின் அவர் அநாகரிகமாக நடந்துகொள்ளவில்லை’ எனக் கூறியுள்ளார். ஆனால் யார் அந்த முன்னணி காமெடி நடிகர் என்பது பற்றி மட்டும் கூறவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.. கமல்ஹாசனின் சோக பதிவு..!

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்