Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 14 January 2025
webdunia

என் தங்க இதயத்துக்கு பிறந்தநாள் - கணவருக்கு வாழ்த்து சொன்ன நிக்கி கல்ராணி!

Advertiesment
என் தங்க இதயத்துக்கு பிறந்தநாள் - கணவருக்கு வாழ்த்து சொன்ன நிக்கி கல்ராணி!
, புதன், 14 டிசம்பர் 2022 (16:13 IST)
என் தங்க இதயத்துக்கு பிறந்தநாள் - கணவருக்கு ரொமான்டிக் வாழ்த்து சொன்ன நிக்கி கல்ராணி!
 
பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியான நடிகை நிக்கி கல்ராணி தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 
 
தமிழில் டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமான இவர் யாகாவாராயினும் நா காக்க, மரகதநாணயம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். 
 
நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் கணவர் ஆதிக்கு ரொமான்டிக் வாழ்த்து கூறியுள்ளார் நிக்கி கல்ராணி. 
 
அந்த பதிவில், என் தங்க இதயம், எனக்கு பிடித்த மனிதர், சிறந்த நண்பர், காதலன் & எந்த நேரத்திலும் தூங்கும் (சில நேரங்களில் எரிச்சலான) சாம்பியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 
முடிவில்லாத சிரிப்புகளுக்கும், அபிமான அன்புக்கும், சிறந்த அரவணைப்புகளுக்கும் நன்றி.நான் உங்களுக்காக உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தினமும் நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன். என கூறி வாழ்த்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சரான அண்ணன் உதயநிதிக்கு தயாநிதி அழகிரி வாழ்த்து!