Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த நமீதாவை ரொம்ப பிடிச்சிருக்கு - ஸ்லிம் பியூட்டியை வர்ணிக்கும் ரசிகர்கள்!

Advertiesment
இந்த நமீதாவை ரொம்ப பிடிச்சிருக்கு - ஸ்லிம் பியூட்டியை வர்ணிக்கும் ரசிகர்கள்!
, திங்கள், 9 செப்டம்பர் 2019 (16:04 IST)
நயன்தாரா காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.


 
தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா  உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது.  
 
பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். இந்நிலையில் தற்போது தனது உடல் எடையை குறைத்து கட்டான உடல் தோற்றத்தை பெற கடந்த சில நாட்களாக கடுமையாக  முயற்சித்து வருகிறார். 
 
அந்தவகையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள நமீதா தற்போது சிவப்பு நிற அழகிய உடையில் ஸ்லிம்மாக தோற்றம் கொடுக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஹார்டின் ஸ்மைலியை போட்டு இந்த நமீதா மிகவும் அழகாக இருக்கிறார் என வர்ணித்து வருகின்றனர் . 
 


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திட்டமிட்டு நாமினேட் செய்த ஹவுஸ்மேட்ஸ் - வனிதாவுக்கு பேராதரவு கொடுக்கும் மக்கள்!