Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு விளம்பரம்..ம்ம்.. பதற்றத்தில் பாலிவுட் நடிகை

Advertiesment
ஒரு விளம்பரம்..ம்ம்.. பதற்றத்தில் பாலிவுட் நடிகை
, செவ்வாய், 29 நவம்பர் 2016 (15:52 IST)
ரஜினிக்கு வில்லனாக 2.0 படத்தில் நடிக்கிறார் அக்‌ஷய் குமார். பாலிவுட்டில் முன்னணி நடிகரான அக்ஷய்குமார் டிம்பிள் கபாடியாவின் மகள் டுவிங்கிள் கன்னாவை மணந்திருக்கிறார்.


 


சினிமா தவிர பனியன், ஜீன்ஸ் பேன்ட் போன்ற விளம்பர படங்களிலும் இவர் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஆடை அணிவகுப்பு ஒன்றில் அக்‌ஷய்குமார் பங்கேற்றார். பட்டன் இல்லாத ஜீன்ஸ் பற்றி விளம்பரம் செய்வதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேடையில் ஜீன்ஸ் டி ஷர்ட் அணிந்து வந்தார் அக்‌ஷய். 
 
முதல்வரிசையில் அவரது மனைவி டுவிங்கிள் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தார். திடீரென்று மனைவி டுவிங்கள் முன்போய் நின்ற அக்‌ஷய் தனது  பேன்ட் பட்டனை கழற்றும்படி கூறினார். ஒரு நிமிடம் ஷாக் ஆனவர் பிறகு விளம்பரத்துக்காக இப்படி செய்வதை புரிந்துகொண்டு பேன்ட் பட்டனை மேடையிலேயே கழற்றிவிட்டார். இந்த காட்சியை புகைப்படக்காரர்கள் படம் எடுத்து தள்ளினர். 
 
பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக டுவிங்கிள் மீது ஒருவர் போலீசில் புகார் செய்ததுடன் தன்னை டுவிங்கிள் அடித்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து டுவிங்களை கைது செய்த போலீசார் 500 ரூபாய் ஜாமீனில் உடனடியாக விடுதலை செய்தனர். ஆனால் இதுதொடர்பான வழக்கு இன்னும் நடந்து வருகிறது. இந்த வழக்கால் பாதிப்பு வந்துவிடுமா என்ற பதற்றத்துடன் சக நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காட்டிக்கொடுத்த பாவனா: பழி தீர்த்த திலீப்!