Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விபத்தில் சிக்கிய ஆலியா மானசா - பெருந்துயரத்தில் சஞ்சீவ் - வீடியோ!

Advertiesment
விபத்தில் சிக்கிய ஆலியா மானசா - பெருந்துயரத்தில் சஞ்சீவ் - வீடியோ!
, செவ்வாய், 10 ஜனவரி 2023 (11:18 IST)
ரசிகர்களின் விரும்பும் கியூட்டான சீரியல் நடிகைகளில் ஒருவரான ஆலியா மானசா ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார். அதே சீரியலில் நடித்த ஹீரோ சங்கீவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது சான் டிவியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் ஆலியா மானசா விபத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் வீடியோ வெளியிட்டு, " எனக்கு உங்கள் பிரார்த்தனைகள் தேவை. இந்த எலும்பு முறிவில் இருந்து விரைவில் விடுபட எனக்கு உதவுங்கள் என்னால் நடக்க கூட முடியவில்லை, ஆனால் நான் நொடிக்கு நொடி குணமாகி வருகிறேன், கரணம் உங்கள் பிரார்த்தனை தான். 
 
இந்த விபத்தில், என் கணவர் என்னை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை கடவுள் எனக்கு புரிய வைத்தார். அவர் எப்போதும் என்னை மிகவும் நேசிக்கிறார், அது எனக்குத் தெரியும், ஆனால் இப்போது நான் இந்த வழியில் செல்வதை அவர் பார்க்கவில்லை.சஞ்சீவி என் கணவனாக கொண்டதற்காக இந்த உலகில் உள்ள பெண் நானே. நான் உன்னை நேசிக்கிறேன் பாப்பு குட்டி என பதிவிட்டு ஆறுதல் பெற்று வருகிறார். இதோ அந்த வீடியோ: 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிய வந்து எட்டி பார்க்கும் அந்த அழகு - கிளாமர் தூக்கலா காட்டும் மலாய்கா!