Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களின் முடிவே இறுதியானது -ரசிகர்களிடம் யோசனை கேட்ட விஷால்!

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (10:14 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால் தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் விவாகரத்து செய்துகொண்டனர்.

இதையடுத்து கேரியரில் அதீத கவனத்துடன் இருந்த வந்த விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவை காதலிக்க துவங்கினார். விரைவில் இருவருக்கும் இரண்டாம் திருமணம் நடைபெறவிருக்கிறது. விஷ்ணு விஷால் தற்போது FIR படத்தில் நடித்து வருகிறார். அதற்காக தனது உடலை மெருகேற்றி வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் "எனது அடுத்த திரைப்படத்தை ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்க விரும்பினேன், ஆனால் வாழ்க்கையில் வெவ்வேறு திட்டங்கள் இருந்தன. நான் இன்னும் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன், அதே தேதியில் விவரங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறன், ஆனால் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே.... வேறு ஏதாவது ஒன்றை செய்யலாம் என்று முயற்சித்தோம், அதனால் 'டைட்டில் அறிவிப்பு மற்றும் டீசர் ' உருவாக்கியுள்ளோம், ஆனால் உங்கள் முடிவே இறுதியானது என ரசிகர்களிடம் யோசனை கேட்க அதற்கு அனைவரும் வெளியிடுங்கள் என கூறி வருகின்றனர். இதனால் கூடிய விரை விஷ்ணு விஷாலின் புது படத்தின் அறிவிப்பு வெளியாகலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments