Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் நீ தான் பிகில் அடித்த விஜய் அம்மா - வைரலாகும் கடிதம்!

Advertiesment
ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் நீ தான் பிகில் அடித்த விஜய் அம்மா - வைரலாகும் கடிதம்!
, புதன், 28 ஆகஸ்ட் 2019 (14:47 IST)
தளபதி விஜய்க்கு அவரது தாய் ஷோபனா எழுதியுள்ள கடிதம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களால் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாக பரவி வருகிறது. அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பது " ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் கடிதத்தில், தவழ்ந்து பின் தாயின் உள்ளம் நோக்கி வரும். அவளும் உச்சி முகர்வாள். 


 
ஆனால், நான் பெற்ற பிள்ளை இன்று கோடானுகோடி தாய்மார்கள், ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களும் அதை தளபதியாய் கொண்டாடிக் கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை கொண்டாடிக் சிறு ஈரம் கசிந்து வழிகிறது. அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க விஜய் உன்னைப் பற்றி.  நீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை எல்லாம் (ஏற்றம், இறக்கம், தோற்றல், போற்றல்) அசைப்போட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சிக் குளிர்ந்து என் என் எங்கும் வடிகிறதே அந்த நுண்ணிய உணர்வுகளை எந்த காகிதத்தில் வடிப்பது. 
 
அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்பரிக்கும் இளம் வயதில் கூட நீ அமைதியின் அவதாரமாய் இருக்கையில் இயங்குகயில் என் ஆழ் மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிகையில் அதை எந்த பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்
 
நீ உன் அழுகை நிறுத்தி, முதன் முதல் உன் பூவிதழ் விரித்து, புன்னகைத்தது முதல் இன்று உன் இதயத்தளவு ரசிகர்களின் பெரு வெள்ளத்திற்கு இடையே இன்பத்தத்தளிப்பில் நீ புரியும் புன்னகையை விவரிக்க... தேடி கிடைக்காமல் வார்த்தைகளை கடன் வாங்கும் (கோடி கோடியாய் பொருள் இருந்தும்) நிலையை ஒரு சிறப்பிதழுக்குள் என்னால் எப்படி எழுதி விட முடியும்?
 
தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட இந்த உலகமே காத்திருக்கையில் தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே - வீடியோ!