Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (15:49 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நேற்று இரவு திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை கோளாறு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே

குறிப்பாக சமீபத்தில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதும் அதன் பின்னர் பூரண குணமானார். நடைபெற்று முடிந்த சட்டசபைத்தேர்தல் பிரசாரத்தில் ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் அவரது உடல் நலத்திற்கு என்ன என்ற அச்சம் தேமுதிக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டது

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வழக்கமான உடல் பரிசோதனைக்காக ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியான நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும், வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளுவதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments