Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது நிவாரண நிதிக்கு நடிகர் வடிவேலு ரூ.6 லட்சம் நிதியுதவி

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (16:45 IST)
சமீபத்தில்  மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை முழுவதும் பாதிக்கப்பட்டன. இதில்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு  நிவாரண உதவி செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு  தொழிலதிபர்கள், சினிமாத்துறையினர் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் உதவி செய்து வருகின்றனர்.

ஏற்கனவே, கலாநிதிமாறன், சூர்யா, விஷ்ணு விஷால், சூரி ஆகியோர்   நிவாரண உதவி வழங்கிய  நிலையில், இன்று  அமைச்சர் உதய நிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் வடிவேலு ரூ.  6 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் வலைதள பக்கத்தில்,

‘’மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருகு என் அன்பும் நன்றியும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments