Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்களுக்கு பண உதவி செய்த நடிகர் சூர்யா !!

Advertiesment
ரசிகர்களுக்கு பண உதவி செய்த நடிகர் சூர்யா !!
, புதன், 9 ஜூன் 2021 (17:00 IST)
தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உதவி வருகின்றனர்.

சமீபத்தில் தமிழக முதல்வரின் கொரொனா தடுப்பு நிவாரண நிதிக்கு  நடிகர் சூர்யா, சிவக்குமார் குடும்பத்தினர் ரூ. 1 கோடி வழங்கினர்.

இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா கொரொனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சுமார் 250 பேருக்கு தலா ரூ.5000 பணத்தை அவர்களின் வங்கிக் கணக்கில் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இதுகுறித்து சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் வங்கியில் டெபாசிட் ஆனது குறித்த மெசேஜ்-ஐ ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதனால் சூர்யாவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்பணத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடன் சர்ச்சை - ஜீவாவின் தந்தை மீது விஷால் புகார்!