Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது - வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி

J.Durai
திங்கள், 15 ஏப்ரல் 2024 (07:25 IST)
சென்னை, பல்லாவரத்தில் நடைபெற்ற விஸ்டாஸின் பதினான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில்,திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்  தொழில் முனைவோரான  கெளரவ டாக்டர் பட்டம் ராம்சரணுக்கு கொடுத்து அங்கீகரித்துள்ளது.
 
இந்த நிகழ்வு பல்லாவரம் விஸ்டாஸ் வளாகத்தில் உள்ள வேலன் அரங்கில் நடைபெற்றது.
 
இந் நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (ஏஐசிடிஇ) தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீத்தாராம் கலந்து கொண்டு பட்டதாரி மாணவர்களுக்கு, தொடர்ச்சியான கற்றல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல், திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஊக்கமளிக்கும் உரை நிகழ்த்தினார்.
 
இளங்கலை பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பிஎச்டி உட்பட மொத்தம் 4555 பட்டதாரிகள் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
 
பட்டமளிப்பு விழாவில் 80 தங்கப் பதக்கங்கள் மற்றும் 100 பி எச்.டி பட்டங்களை மாணவர்கள் பெற்றனர்.
 
அந்தந்தத் துறைகளில் வல்லுநர்களின் சிறந்த பங்களிப்பைப் பாராட்டி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அவர்கள் முறையே இஸ்ரோவின் சந்திரயான் -3 திட்ட இயக்குநர் டாக்டர் பி.வீரமுத்துவேல்,  ராம் சரண் கொனிடேலா, திரைப்பட நடிகர், Dr. GSK வேலு, Trivitron Healthcare இன் நிறுவனர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் பத்மஸ்ரீ. ஷரத் கமல் அச்சந்தா, இந்திய தொழில்முறை டேபிள் டென்னிஸ் வீரர்,
 
பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து, டாக்டர். ஐசரி கே. கணேஷ், விஸ்டாஸ் நிறுவனர்- அதிபர் மற்றும் நடிகர் ராம்சரண் கொனிடேலா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்...
 
ராம்சரண் தனக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
 
மேலும் ராம்சரண் கொனிடேலா இந்த அங்கீகாரத்திற்கு காரணம் தன்னுடன் பணியாற்றியவர்கள் மற்றும் ரசிகர்கள் தான் என்று நெகிழ்ச்சியாகக் கூறினார். 
 
செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் பணிபுரியும் வாய்ப்பிற்காக இயக்குநர் ஷங்கருக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், இந்த டாக்டர் பட்டத்திற்காக தனது குடும்பம் குறிப்பாக, தனது அம்மா ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியதைச் சொன்னார். 
 
கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ராம்சரண் கொனிடேலாவை தேர்ந்தெடுத்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டாக்டர் ஐசரி கே. கணேஷ், அவரின் அபாரமான திறமையை குறிப்பிட்டு, இன்னும் பெரிய மைல்கற்களை சினிமாவில் அவர் அடைவார் என நம்பிக்கையை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments