Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் நாக சைதன்யாவுக்கு இன்று நிச்சயதார்த்தமா? மணமகள் பிரபல நடிகை என தகவல்..!

Siva
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (09:09 IST)
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்துவிட்ட பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் பிரபல நடிகைக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக கூறப்படுவது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யா - சமந்தா திருமணம் நடந்த நிலையில் திருமணம் ஆகி சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

சமந்தாவை பிரிந்த பின் நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபியா துலிபாலா  உடன் டேட்டிங்கில் இருந்தார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் இந்த நிச்சயதார்த்தம் குறித்து சோபியா துலிபாலா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை சமந்தா, நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின் இரண்டாவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள நிலையில் நடிகர் நாக சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுன் எதிராக அவதூறு கருத்துக்கள்: சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கை..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்… ஜெயம் ரவி & ஆர்த்திக்கு நீதிமன்றம் உத்தரவு!

பாலாவுக்காக 10 கோடி ரூபாயை விட்டுக்கொடுத்த சூர்யா.. பிரபலம் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments