Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜவான் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த பிரபாஸின் ‘கல்கி’

vinoth
வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (09:08 IST)
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கினார். இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலை தொடக்கம் முதலே பெற்று வந்தது. இப்போது வரை இந்த திரைப்படம் 1100 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

இந்நிலையில் கல்கி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் சாதனைப் படைத்த ஷாருக் கானின் ‘ஜவான்’ படம் இந்தியாவில் செய்த வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ஜவான் திரைப்படம் தன்  வாழ்நாளில் இந்தியாவில் 760 கோடி ரூபாய் வசூலித்ததது. கல்கி அதை 40 நாட்களில் முறியடித்துள்ளது. இந்தியில் 350 கோடி ருபாயும், தெலுங்கில் மட்டும் 335 கோடி ரூபாயும், மற்ற இந்திய மொழிகளில் 75 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது கல்கி.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments