Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகர் கருணாகரனின் தந்தை மரணம்… ரசிகர்கள் அஞ்சலி!

பிரபல நடிகர் கருணாகரனின் தந்தை மரணம்… ரசிகர்கள் அஞ்சலி!

vinoth

, சனி, 14 செப்டம்பர் 2024 (10:44 IST)
குறும்படங்களின் மூலம் இயக்குனர்கள் அலை ஒன்று தமிழ் சினிமாவில் வீசிய போது அவர்களின் படங்களில் நடிகராக நடித்து புகழ்பெற்றவர் கருணாகரன். இவர் நடித்த சூதுகவ்வும், ஜிகர்தண்டா மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய திரைப்படங்கள் வெற்றி பெற்றதோடு, இவருக்கு பரவலான கவனத்தையும் பெற்றுத்தந்தன.

இதையடுத்து முன்னணி நடிகராக வலம் வந்தார் கருணாகரன். இந்நிலையில் இவரின் தந்தையான காளிதாஸ், உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 77. காளிதாஸ் கேபினட் செயலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தந்தையின் மரணச்செய்தியை அறிவித்த கருணாகரன் அவரின் இறுதி மரியாதை நிகழ்வுகள் இன்று மாலை பெசண்ட் நகரில் நடக்கும் என்று அறிவித்துளார். இது சம்மந்தமான அவரது பதிவில் “தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து 37 ஆண்டுகள் சேவையாற்றிய என் தந்தை இன்று உயிரிழந்தார். இவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 3 மணி அளவில் பெசன்ட் நகரில் நடைபெற உள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, செய்தியாளர் குழுவை அனுப்புவதைத் தவிர்க்குமாறு ஊடகங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருள்நிதி படத்தில் நடிகராக இணைந்த இயக்குனர் அமீர்!