Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் அப்பா ஆகிறார் நடிகர் கார்த்தி - சந்தோஷத்தில் சிவகுமார் குடும்பம்!

Advertiesment
மீண்டும் அப்பா ஆகிறார் நடிகர் கார்த்தி - சந்தோஷத்தில் சிவகுமார் குடும்பம்!
, செவ்வாய், 6 அக்டோபர் 2020 (08:19 IST)
தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பங்களில் ஒன்று சிவகுமார் குடும்பம். சூர்யா ,கார்த்தி , ஜோதிகா , பிருந்தா என அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் சினிமாத்துறையில் இருப்பவர்கள். இதில் நடிகர் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவகாரமெடுத்து முதல் படத்திலேயே தனக்கான வெற்றியை நிலைநாட்டிக்கொண்டார்.

தொடர்ந்து பையா, தீரன் அதிகாரம் ஒன்று , கைதி , மெட்ராஸ் உள்ளிட்ட படங்கள் கார்த்தியின் திரைப்பயணத்தை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பெற்றோர் பார்த்து வைத்த பெண் ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தாள். அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து தற்ப்போது இந்த லாக்டவுனில் மனைவி ரஞ்சனி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளதாக மகிழ்ச்சியான செய்தி வெளியாகி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதனால் சிவகுமார் குடும்பமே மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனராம். தற்ப்போது மனைவியுடன் நடிகர் கார்த்தி சொந்த ஊரான கவுண்டம்பாளையம் சென்றுள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் ராக்கர்ஸில் படம் பார்த்துவிட்டு ஓடிடிக்கு பணம் கட்டிய ரசிகர்: பொய்க்கு ஒரு அளவு வேண்டாமா?