Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதிக்கு நன்றி கூறிய நடிகர் கமல்ஹாசன்

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (19:35 IST)
நடிகர் கமல்ஹாசன், உதய நிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன் இன்று தன் 68 வது பிறந்த நாள் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அரசியல் தலைவர்கள், சினிமா  நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

இந்த  நிலையில்,  நடிகரும், எம்.எல்.ஏவுமான உதய நிதிஸ்டாலின் தன் டிவிட்டர் பக்கத்தில், தன் அசாத்திய கலைத்திறனால், கடும் உழைப்பினால், தளராத நம்பிக்கையால் மக்களைக் கவரும் கலைஞானி, @maiamofficial கட்சியின் தலைவர், உலகநாயகன் @ikamalhaasan சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு, கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’இனிய தம்பி  உதய நிதியின், வாழ்த்துக்களுக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

விரைவில் நடிகர் கமலின் ராஜகமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் உதய நிதி ஹீரோவாக நடிக்கவுள்ளார். அதேசமயம், உதய நிதி தயாரிப்பில், கமல்- ஷங்கர் கூட்டணியில் இந்தியன்-2 உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments