Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அன்பைப் பரப்புங்கள்… ஓம் நமசிவாய – ரசிகர்களுக்கு தனுஷ் நன்றி!

Advertiesment
அன்பைப் பரப்புங்கள்… ஓம் நமசிவாய – ரசிகர்களுக்கு தனுஷ் நன்றி!
, வெள்ளி, 18 டிசம்பர் 2020 (17:26 IST)
ஹாலிவுட்டில் நடிக்க கிடைத்த பட வாய்ப்பை உறுதி செய்துள்ள தனுஷ் அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

The Gray Man எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், ரையான் கோஸ்லிங், க்ரிஸ் இவான்ஸ், ஜெஸ்ஸிகா ஹென்விக் மற்றும் அர்மா டி அனாஸ் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தில், தனுஷும் நடிக்க உள்ளார். நெட்பிளிக்ஸின் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தின் அறிவிப்பை காலையில் நெட்பிளிக்ஸ் வெளியிட்டது. அதையடுத்து தனுஷுக்கு பல தரப்பிலும் இருந்து வாழ்த்து மழை பொழிந்தது. இதற்கு முன்னர் தனுஷ் 2018ல் வெளிவந்த The Extraordinary Journey of the Fakir படத்தின் மூலம் ஹாலிவுட்டிற்கு அறிமுகமானவர். The Gray Man அவரது இரண்டாவது ஹாலிவுட் திரைப்படமாக இருக்கும்.

இந்நிலையில் இப்போது அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இதுபற்றி ‘ரயன் காஸ்லிங், க்றிஸ் ஈவன்ஸ் நடிக்கும், ரூஸோ சகோதரர்கள் (அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா) இயக்கும் நெட்ஃபிளிக்ஸின் 'தி க்ரே மேன்' குழுவோடு இணைகிறேன் என்பதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த அற்புதமான ஆக்‌ஷன் நிறைந்த அனுபவத்தில் பங்காற்றுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன். உலகம் முழுவதிலும் இருக்கும் என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு என் நன்றி. இவ்வளவு வருடங்களாக அவர்கள் காட்டி வரும் தொடர் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன், அன்பைப் பரப்புங்கள். ஓம் நம சிவாய, அன்புடன் தனுஷ்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எத்தனை பேர் கூட நடிச்சாலும் அவர் தான் என்னுடைய ஃபேவரைட் - நயன்தாரா