Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை படக்குழு வெளிநாடு செல்வதில் தாமதம்… அடுத்த பணியை முடித்த அஜித்!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (17:31 IST)
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடக்க உள்ளது.

 இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. இந்த படத்தில் கதாநாயகியாக ஹூமா குரேஷியும் வில்லனாக நடிகர் கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர்.

ரசிகர்களின் பல மாத நச்சரிப்புக்குப் பிறகு மே 1 ஆம் தேதி அப்டேட்கள் வெளியாகும் என போனி கபூர் அறிவித்துள்ளார். இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு இன்னும் 3 நாட்கள் மட்டுமே மீதமுள்ளதாக நடிகர் கார்த்திகேயா தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் 3 நாட்கள் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட வேண்டும் என்பதால் அந்நாட்டு அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்களாம்.

அனுமதி கிடைப்பதில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளதால் இப்போது படத்தின் டப்பிங் பணிகளை இயக்குனர் ஹெச் வினோத்தை வைத்து அஜித் முடித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments