Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்ச்சையைக் கிளப்பிய ஆ ராசாவின் பேச்சு… திமுகவினரே முகம்சுளிப்பு!

Advertiesment
சர்ச்சையைக் கிளப்பிய ஆ ராசாவின் பேச்சு… திமுகவினரே முகம்சுளிப்பு!
, வெள்ளி, 26 மார்ச் 2021 (14:35 IST)
திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ ராசா எடப்பாடி பழனிச்சாமி கள்ள உறவில் பிறந்த குழந்தை என்று பேசி இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தேர்தலால் தமிழகமே பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில் தலைவர்கள் தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் ஒருவரை மாற்றி ஒருவரை குற்றம்சாட்டுவது வாடிக்கையாகியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ ராசா எடப்பாடி கள்ள உறவில் பிறந்த குழந்தை என சொல்லியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சாரத்தின் போது பேசிய அவர் ‘பத்திரிக்கைகள் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமியை மிகப்பெரிய தலைவரைப் போல சித்தரிக்கிறார்கள் . பொதுவாழ்வில் அவர் எட்டியிருக்கும் உயரம் ஒன்றும் இல்லை. நல்ல உறவில் நல்ல முறையில் பிறந்த ஆரோக்யமான குழந்தைதான் ஸ்டாலின் என்றால், கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைதான் எடப்பாடி பழனிச்சாமி. ’ எனப் பேச அந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆ ராசாவின் இந்த பேச்சை திமுகவினரே எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். இது சம்மந்தமாக ஊடகங்களில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய கப்பலால் தினமும் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு தேக்கம்