Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குறும்படம் எடுக்கும் இளைஞர்களுக்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ’ஆரி’

Advertiesment
குறும்படம் எடுக்கும் இளைஞர்களுக்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ’ஆரி’
, வெள்ளி, 1 ஜூலை 2016 (14:58 IST)
‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆரி. இவர் தற்போது குறும்படம் எடுக்கும் இயக்குனர்களுக்காக புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
 

 
இதுகுறித்து சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரி, இந்த தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.
 
‘ஆரிமுகம்’ என்று பெயர் வைத்துள்ள இவரது தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகப்படுத்திவிட்டு ஆரி பேசும்போது, ”பெரும்பாலான உதவி இயக்குநர்கள் தங்கள் கதையை ஒரு பத்து நிமிட குறும்படமாக எடுக்க பெரும் சிரமப்படுகின்றனர். அந்த பத்து அல்லது முப்பது நிமிட குறும்படத்தை எடுப்பதற்கான செலவையும் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கும் எனது ஆரிமுகம் நிறுவனம் உதவும்.
 
மேலும், உதவி இயக்குநராக சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ள 1700 பேர் மட்டுமே இந்த நிறுவனத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவர். இந்த 1700 பேரிலிருந்து ஒருவருக்கு முதலில் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு ஏற்படுத்த உள்ளோம்” என்றார்.
 
மேலும், ஆரி முகம் நிறுவனத்தில் நானும் முகமது இப்ராஹிம் மற்றும் ஷாநவாஸ் ஆகியோரும் இணைந்து செயல்பட உள்ளோம் என்றும், குறும்பட எடுக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவும் வழிசெய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி நலமாக இருக்கிறார் - லைக்கா கிரியேடிவ் ஹெட் தகவல்