Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் தவசிக்கு நிதியுதவி அளிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்கள் !

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (17:26 IST)
உணவுக்குழல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் தவசிக்கு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் இருந்து நிதியுதவி வந்து சேர்கின்றன.

கிழக்குச் சீமையிலே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் தவசி பிரபலமானது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த கோடாங்கி கதாபாத்திரத்தின் மூலம்தான். இப்படத்தின் மூலம் புகழ்பெற்றதால் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் அவருக்குத் திடீரென்று உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சாப்பிட முடியாமல் அவர் மிகவும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத நிலைக்கு மாறியுள்ளார். இதற்காக மதுரையில் உள்ள சரவணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவசி தனக்குச் சக நடிகர்கள் உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் சரவணா மருத்துவமனையின் உரிமையாளரும் திமுக எம் எல் ஏ வுமான டாக்டர் சரவணன் தங்கள் மருத்துவமனையில் தவசிக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பொருளாதார ரீதியாக யாராவது உதவினால் அவரது குடும்பத்துக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், சூரி, விஜய் சேதுபதி மற்றும் சிம்பு உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தனர். மேலும் அவருக்கு நிதியுதவி வேண்டி அவரின் வங்கி எண் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தவசிக்கு ஆன்லைன் மூலமாக பணம் அனுப்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

கடைசி நேரத்தில் விடாமுயற்சி படத்தில் இணைந்த பிரபலம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது: இயக்குனர் வெற்றிமாறன்

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments