Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமாத்துறை வேலை நிறுத்தம் குறித்து அரவிந்த் சாமி கருத்து

Advertiesment
சினிமாத்துறை வேலை நிறுத்தம் குறித்து அரவிந்த் சாமி கருத்து
, சனி, 24 மார்ச் 2018 (11:28 IST)
கடந்த 1ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வரும் வேலை நிறுத்தம் குறித்து நடிகர் அரவிந்த் சாமி தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். 
டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி முதல் புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், கடந்த 16ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளும், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும்  நிறுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, நேற்று முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில  படங்கள் மட்டும் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றன.
webdunia
இந்நிலையில், இந்த வேலை நிறுத்தம் குறித்து நடிகர் அரவிந்த் சாமி தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். “என்னைப் பொறுத்தவரை மாஸ்டரிங்  அல்லது விபிஎப் செய்வதற்கான கட்டணத்தை தயாரிப்பாளரே ஏற்றுக் கொண்டால் தான் கண்டண்ட் சிதையாமல் இருக்கும். அதேபோல அந்த கண்டெண்டால்  வரும் விளம்பரத்திற்கான லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டும். வேண்டுமானால் லாபத்தில் விநியோகஸ்தர்களுக்கு பங்கு தரலாம்” என்று  தெரிவித்துள்ளார் அரவிந்த் சாமி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட நடிகை