Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அய்யய்யோ மறுபடியுமா...! ஆண்டவா இதையெல்லாம் பாக்கவா எங்கள படச்ச!

Advertiesment
அய்யய்யோ மறுபடியுமா...! ஆண்டவா இதையெல்லாம் பாக்கவா எங்கள படச்ச!
, புதன், 7 ஆகஸ்ட் 2019 (13:12 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் மீண்டுமொரு காதல் டிராமா அரங்கேற்றியுள்ளனர். இதை சற்று ஜீரணிக்க முடியாமல் ரசிகர்கள் ஆளாளுக்கு புலம்பி வருகின்றனர். 


 
கவின் - சாக்ஷி காதலை அடுத்து கடந்த சில நாட்களாகவே அபிராமி - முகனின் காதல் பிக்பாஸ் வீட்டில் பிரதிபலித்து வருகிறது. முகன் சும்மா இருந்தாலும் அபிராமி விடுவதாக தெரியவில்லை தனக்கு கன்டென்ட் கிடைக்கவேண்டும் என்றே முகனுடன் நாடகமாடி வருகிறார். சமீபத்தில் கூட முகன் சாக்ஷியுடன் நெருங்கி பழகி வந்ததை பிடிக்காத அபிராமி சண்டையிட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். இதனால் கடுப்பான முகன் கட்டிலை உடைத்து நொறுக்கினார். 
 
அந்தவகையில் மீண்டும் தற்போது வந்துள்ள ப்ரோமோ வீடியோவில், அபிராமி முகனுக்கு ஐ லவ் யு என்று சடாலென்று கூற...இதற்கு நான் என்ன பதில் சொல்லவேண்டுமென்று தெரியவில்லை என்று முகன் முணுமுணுக்கிறார். அதற்கு அபிராமி..  நீ எதுவும் சொல்லவேண்டாம்.. என் காதலை ஏத்துக்கோங்க நான் சொன்னேனா..இல்லை!.. எனவே இந்த நேரத்துல இங்க நான் சந்தோஷமா இருக்கிறேன்னு சொல்லி ப்ரோமோ பாக்குற ஆடியன்ஸை சாகடிக்குறாங்க.. 
 
இந்த வீடியோ  பார்த்த நெட்டிசன்ஸ். அவனுக்கு என்ன வயசு உனக்கென்ன வயசு ...உன் தம்பி வயசு இருக்குறவனை புடிச்சு இப்படி டார்ச்சர் பண்ணுறியே நியாயமா இது.. என கடுப்பாகி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"விபரீதத்தில் முடிந்த டாஸ்க்" - சேரனுக்கு என்ன ஆனது? வீடியோ!