Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயாரின் சிகிச்சைக்காக சென்னையில் குடியேறும் அமீர்கான்?

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (07:16 IST)
கடந்த ஆண்டு அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா என்ற திரைப்படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது. படம் சுமாராக இருந்தாலும், பாலிவுட்டில் அந்த படத்துக்கு எதிராக பரப்பப் பட்ட வெறுப்புப் பிரச்சாரமும் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

இதனால் அவர் நடிப்பில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகக் கூறியுள்ளார். இதுபற்றி கூறிய அவர் “நான் தொடர்ந்து 35 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். எனது அம்மா மற்றும் மகளுடன் நான் நேரம் செலவிடவே இல்லை. அதனால் இப்போது ஒரு சிறிய பிரேக் எடுத்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரின் தாயாரின் சிகிச்சைக்காக அமீர்கான் அடுத்த இரண்டு மாதங்கள் சென்னையில் தங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அமீர்கானின் தாயார் இருதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments