Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 மாநில தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற மிசோரம் மக்கள் வேண்டுகோள்..!

5 மாநில தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற மிசோரம் மக்கள் வேண்டுகோள்..!
, வியாழன், 12 அக்டோபர் 2023 (15:26 IST)
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 23ம் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தேதி நவம்பர் 25 என மாற்றப்பட்டது. இந்த நிலையில்  மிசோரம் மாநில மக்கள் வாக்கு எண்ணும் தேதியை மாற்ற வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் 5 மாநில தேர்தல் தேதியின் அறிவிப்பின்படி மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30ம் தேதியும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சத்தீஸ்கரில் மட்டும் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இந்த 5 மாநில தேர்தல்  முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணும் நாளான டிசம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பது  கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான நாள் என்பதால், வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

90 சதவீதம் கிறிஸ்துவர்களை கொண்ட மாநிலம் மிசோரத்தில் நவம்பர் 7ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு பதில் வேறு தினத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்த கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கை ஏற்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருப்பதி பிரம்மோத்ஸவம்.. தமிழகத்தில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள்..!