Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிர்வாண புகைப்படத்தை கேட்டு படுக்கைக்கு அழைத்த நபர்! என்னடா இவ்ளோ வெறியா!

Advertiesment
Chinmayi Sripaada
, செவ்வாய், 11 ஜூன் 2019 (12:45 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினார். பிறகு சின்மயி சொன்னது எல்லாம் பொய் என்று வைரமுத்து மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து #metoo ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.  
 
தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டை கூறியதால் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பாடகி சின்மயிக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ்களை அனுப்புகின்றனர். அதனை சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.  

webdunia

 
இந்நிலையில் தற்போது அந்த நபர் யார் என்று அவருடைய பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தனக்கு தினமும் இதுபோல டஜன் கண்ணகில் போனிலும் இ-மெயிளிலும் ஆபாசமான மெசேஜ்ஜஸ் வருகிறது என்றும் அதை அனைத்தையும் நான் வெளியில் சொல்வது இல்லை என்றும் கூறி தற்போது அந்த நபர் பேசியுள்ளதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளார். சின்மயியிடம் மோசமான ஆபாச வார்த்தைகளால் முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ள அந்த நபரை பலரும் ட்விட்டரில் திட்டி தீர்த்து வருகின்றனர். 

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அர்னால்டு மகளை திருமணம் செய்த அவென்ஜர்ஸ் பட நாயகன்! யாருன்னு பாருங்க!